தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை

நாடளாவிய ரீதியில் 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இவ்வருடம் சுமார் 8,000 க்குமதிகமான ஆசிரிய டிப்ளோமாப் பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் சுமார் 27 டிப்ளோமாக் கற்கைநெறிகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் மூன்றாம் வாரம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கணிதம் மற்றும் இஸ்லாம் பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தும் பொறுப்பு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, இம்மாதம் 17,18,19 ம் திகதிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது. நேர்முகப் பரீட்சார்த்திகளுக்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி நவாஸ் கூறியுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment