மழைநீரை சேகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வேலுமணி

தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாக தோன்றியுள்ள நிலையில் அனைத்து மக்களும் மழைநீரை சேகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறித்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எஸ்.பி.வேலுமணி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு  38 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் மழைநீர் கட்டமைப்புள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் மழைநீர் சேமிப்பைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் 2இலட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத்திட்டம் செயற்படுத்தப்படும்” என எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment