தி.மு.க.தலைவரை பொறுத்தவரை அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளையென அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஓ.எஸ்.மணியனிடம், சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க வலியுறுத்தாதென மு.க.ஸ்டாலின் கூறியமை குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஓ.எஸ்.மணியன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறியாத விளையாட்டுப் பிள்ளையே மு.க.ஸ்டாலின். ஆகையால்தான் அவர் அப்போது கூறியதை தற்போது மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை தி.மு.க.விலிருந்து திசை மாறிப்போன பிள்ளைகள், திசை தெரியும் போது திரும்பி வருவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு வேறு கட்சியை நோக்கி செல்கின்றனர். வெட்கப்படாதவர்கள் எங்களிடம் வந்துகொண்டிருக்கின்றனர்” என ஓ.எஸ்.மணியன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment