தெருவில் சென்றவர்களை முட்டித்தள்ளும் காளை

ராஜ்கோட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெருவோரம் நின்றுக்கொண்டிருந்த காளை, அவர் அருகில் வந்ததும் திடீரென பாய்ந்து அவரை கீழே தள்ளியது. சற்று நேரம் நின்று பார்த்த முதியவரை மீண்டும் துரத்திச் சென்று சுவர் ஓரமாக அண்டிய அவரை கொம்பால் முட்டி தூக்கியது.
அருகிலிருந்த ஒரு இளைஞர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி, முதியவரை மீட்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். சற்று நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த மற்றொரு இளைஞனின் வாகனத்தையும் அந்த காளை இதே போல் முட்டித் தள்ளியது.
தெருவில் சென்றவர்களை அச்சுறுத்திய காளை மீட்கப்பட்டு, கோசாலையில் விடப்பட்டது.
ANI✔@ANI#WATCH Gujarat: Two people injured after being attacked by a bull near Rajkot yesterday. The bull was later shifted to a cowshed.5531:04 PM - Jun 19, 2019315 people are talking about thisTwitter Ads info and privacy
இதற்கிடையே காளை முட்டி தள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment