வெள்ளப்பெருகினால் தனித்து விடப்பட்ட மக்கள்

கன மழையால் ஏற்பட்ட  வெள்ளப்பெருகினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தொடர்புகளற்று தனித்து விடப்பட்டுள்ளனர். என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் கிழக்குப் பகுதியான  ஜியாங்சி ((Jiangxi)) மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 10 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

திரும்பும் இடமெங்கும் வெள்ளகாடாக காட்சியளிப்பதால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 14 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் உடமைகளை இழந்துள்ளனர்.

இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 660 கோடி ரூபா அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment