உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனிடையே அங்குள்ள 12 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும் கலைப்பதாக, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
உ.பி. கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. வடக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டது.
மேலும் சட்டசபை இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க 2 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment