சட்டசபை முன்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், இன்று சட்டசபையை நோக்கி ஊர்வலமாகச் சென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சட்டசபைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மாநில அரசு கூறியது. ஆனால், தேர்தல் முடிந்தபின்னர் அதுபற்றி எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எங்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை’ என்றனர்.இதேபோல் கடந்த மார்ச் மாதமும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment