ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு அவர் போட்டியிடாவிட்டாலும் ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கமாட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இது தொடர்பாக எமது கோரிக்கையையும் நாம் அவரிடம் முன்வைத்துள்ளோம். எனினும் இது வரையில் அதற்கு ஜனாதிபதி எந்த பதிலையும் வழங்கவில்லை.
அவரது தீர்மானத்தை அறிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment