நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.
அதேபோல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென்றால் எம்மிடம் வெளிப்படையாக அதனை தெரிவிக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசிப்பார்த்து எமது நிலைப்பாட்டுக்கு ஏற்றால்போல் இருந்தால் அவரை ஆதரிப்போம்.
நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி – பிரதமர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றங்கூறிக்கொண்டு தனிப்பட்ட அரசியல் பளிவாங்களிகள் ஈடபட்டு வருவதால் இறுதியாக நாட்டுக்கே பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே இந்த ஆட்சியாளர்களை நீக்கி மீண்டும் எமது அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment