இன ரீதியாக பிரிந்து பிரச்சினை ஏற்படுத்திக் கொள்வது நல்லதல்ல- ஜனாதிபதி

நாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (28) கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment