அச்சம், சந்தேகம் இன்றி தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தற்போது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
காணி உறுதி அற்றவர்களுக்கு காணி இவ்வாறு உறுதிப் பத்திரங்களை வழங்கல் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்குவதற்காக இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலீட்டுக்கு தடையாக இருந்த குறைவான செயல்திறன் கொண்ட நிறுவனங்களின் மறுவாழ்வு சட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர், சம்பந்தப்பட்ட சட்டத்தில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் வர்த்தகத்தை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்ததாகவும், இதனால், இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டு தொடக்கம் சமகால அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை தற்போது பொதுமக்கள் பெற்று வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment