NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் வழங்கிய நபருக்கு பிணை

கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் ​சேர்ந்த மொஹமட் சிபான் என்ற சந்தேகநபரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி சந்தேகநபரை 15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 04 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு சங்கரீலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்துல் மஜீட் மொஹமட் நியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 05 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கொடுக்க முயற்சித்த வேளையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment