10 கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்லலாம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகள் 10 உம் எந்தவித வாக்குப் பலமும் அற்றவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தக் கட்சிகளில் அங்கத்துவம் பெற்றுள்ள சகல உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட கட்சிகள் குறித்து நாட்டு மக்கள் நேற்றுத் தான் அறிந்து கொண்டனர். அதில் உள்ள கருணா அம்மானின் கட்சி மாத்திரம் அறிமுகமான கட்சியாக இருந்தது.
கருணா அம்மான் என்பவர் யார் என்பதை நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். மஹிந்த ராஜபக்ஸ இந்த கட்சிகள் குறித்து பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்த போதிலும் நாட்டில் இக்கட்சிகளுக்கு எந்தவித செல்வாக்கும் இல்லையென்பது தெளிவாகின்றது எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment