மின்னல் தாக்கத்தினால் தீயில் கருகிய வாகனங்கள்

மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் லொறி என்பன மின்னல் தாக்கி தீப் பற்றி எரிந்து  சேதமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.
ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் சுதன் என்பவருடை வீட்டிலேயே இந்த இடர் இடம்பெற்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வியாழக்கிழமை பின் இரவு மின்னல், இடியுடன்  மழை பெய்தது இதன் போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“நள்ளிரவு 12.30 மணியளவில் அயலவர்கள் கூடி என் அழைத்தனர். வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் லொறி என்பன தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன.
பொதுமக்கள் திரண்டு சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்தின் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் எனது நண்பருடைய டொல்பின் வேன் முற்றாக எரிந்து சேதமைந்துவிட்ட லொறியின் முன்பக்கம் தீயால் எரிந்துவிட்டது” என்று வீட்டின் உரிமையாளர் சுதன் தெரிவித்தார்.
“டயர் கடை வைத்துள்ளேன். எனினும் எனது வாழ்வாதரத்தின் முக்கிய பங்கை லொறி ஈடுசெய்கின்றது. டொல்பின் வேன் எனது நண்பருடையது. அவர் எனது வீட்டில் நிறுத்திவைத்திருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment