பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி

பாகிஸ்தானிலிருந்து  இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், இன்று (திங்கட்கிழமை) கூடிய  மக்களவையில் தாக்கல் செய்த தீர்மானமே இவ்வாறு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில்  பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து  இந்தியாவுக்கு மிகவும் உகந்த நாடு என்ற பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா இரத்து செய்தது.
மேலும் பாகிஸ்தானில் உற்பத்தியான மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களின் மீது 200 சதவீதம் சுங்கவரி விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்தது. முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆலோசனைப்படி இதற்கான அறிவிப்பை கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment