2020ம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கொள்கை அடிப்படையில் உடன்பட்டதாகவும் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து வரும் தேர்தல்களில் இலத்திரனியல் வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment