நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.
07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த நவீன வைத்தியசாலை கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
5 மாடி கொண்ட இந்த கட்டிட தொகுதியில் நவீன முறையிலான கட்டில்கள், சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கை தூதுவர் திருமதி.ஜோன் டுர்னேவாட், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், கே.கே.பியதாஸ மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா மாநகர சபை தலைவர், உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதிமார்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment