காலநிலை மாற்றம்: இதுவரையில் 7 பேர் பலி, 496 குடும்பங்கள் பாதிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு தாழ்வுப் பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக தற்பொழுது வரையில் 7 பேர் உயிரிழந்தும் 496 குடும்பங்களைச் சேர்ந்த 1976 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கினிகத்ஹேன – கண்டி பிரதான பாதையின் ஒரு பகுதி 10 கடைகளுடன் சரிந்து வீழ்ந்ததில் அக்கடையில் இருந்த வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சூரியவெவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றின் மீது நேற்று மாலை மரமொன்று வீழ்ந்ததில் 31 வயதுடைய பெண் ஒருவரும் அவருடைய இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன் ஆகரபதன டொரின்டன் தோயிலைத் தோட்டப் பகுதியில் வடிந்தோடும் நீருக்கு அடிபட்டு சிறு பிள்ளையொன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் கண்டி மஹியங்கனை பாதையில் ஒருதொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரம் வீழ்ந்ததில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பிரதேச செயலக பகுதிகளில் 331 குடும்பங்களைச் சேர்ந்த 1250 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேரும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment