உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியதில் எழுவர் உயிரிழந்துள்ளனர்.
கிராண்ட் கே என்ற தீவிலிருந்து ஃபோர்ட் லாடர் டேல் என்ற இடத்தைநோக்கிச் சொன்று கொண்டிருந்தபோது பஹாமாவில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த எழுவரும் அமெரிக்கர்கள் என்பது
தெரியவந்துள்ளது.
க்ராண்ட் பஹாமாவில் இருக்கும் பிரதான பட்டணமான ஃப்ரீ போர்ட் என்ற
இடத்திற்கு சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு நபர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை
அடையாளம் காண இயலவில்லை என்று மேற்கு வெர்ஜினா அதிபர் ஜிம்
ஜஸ்டிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஹாமாவின் பொலிஸ் அதிகாரிகள் விபத்தின் காரணத்தை கண்டறிய
இயலவில்லை, ஆயினும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம்
விசாரணை நடைபெற்று வருகிறது என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment