எச்.ஐ.வி. கிருமியை முழுவதும் அகற்றி மருத்துவர்கள் சாதனை

எலியிலிருந்து எச்.ஐ.வி. கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான நெப்ரஸ்கா (Nebraska) மருத்துவ பல்கலைக்கழகம் சாதனை படைத்துள்ளது.

1981ஆம் ஆண்டு முதன் முதலாக எய்ட்ஸ் நோய்  கண்டறியப்பட்டது. பாதுகாப்பற்ற பாலியல் உறவு, நோய்க் கிருமியுள்ள குருதிப் பரிமாற்றம் போன்றவற்றால் எய்ட்ஸ் நோய்க்கான எச்.ஐ.வி கிருமித் தொற்றுப் பரவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்கி அழிக்கும் எச்.ஐ.வி கிருமி, பின்னர், ஜீன்களில் கலந்து, எய்ட்ஸ் நோயாளியின் உயிரைக் காவு வாங்குகிறது. உயிர்க்கொல்லி கிருமியான எச்.ஐ.வி.க்கு மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், எலியிலிருந்து எச்.ஐ.வி கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்க பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதித்துள்ளனர்.

எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதற்குச் செலுத்தி, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றியுள்ளனர்.

எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என்று கூறப்படுகிறது. எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும் என்பதால், எச்.ஐ.வி நோய் தொற்றுக்கான மருந்தை கண்டறிவதற்கு, தற்போதைய சோதனை முடிவு முதற்படியாக மாறியுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment