ஹெரோயின் விற்பனை உடுவில் பகுதியில் பெண் கைது

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் இளம் குடும்பப் பெண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
  
குறித்த பெண் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வைத்து, கைது செய்யப்பட்டார்.

உடுவில் மல்வம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து  பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போதே குறித்த 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணின் கைப்பையில் இருந்து 8 கிராம் கெரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது,  அவரது கணவர் கடந்த வருடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment