கட்டடப்பொருட்களின் விலை அதிகரிப்பு ; வவுனியாவில் பயனாளிகள் அவதி

கட்டடப்பொருள்களின் விலை அதிகரிப்பினாலும் தர நிர்ணயம் இன்மையினாலும் வீட்டுத்திட்டப் பயனாளிகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக வவுனியா பிரதேச செயலர் மாவட்டச் செயலருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த  விடயத்தை கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நீண்டகாலம் இடம்யர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண விருத்தி தொழிற்பயிற்சி அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தில் 671 வீடுகளுக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்றவண்ணமுள்ளது. 

இருப்பினும் கட்டுமானப்பொருள்கள் வெவ்வேறு விலைகளிலும் வெவ்வேறு தரத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவற்றின் தரங்கள் மிகக்குறைவாக உள்ளன. 

மீள்குடியேறிய வறுமைப்பட்ட மக்கள் தங்களது வீட்டை தங்களால் வழங்கப்பட்ட சரியான மதிப்பீட்டுக்குள் கட்டி முடிப்பதற்கு கட்டடப்பொருள்களின் சரியான விலையும் தரமும் அவசியமானதாகவுள்ளது. 

பொருள்களின் விலை மற்றும் அவற்றின் தரத்தை சரியாக நடைறைப்படுத்துவதற்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் கட்டுமானப்பொருள்களின் விலைகள் இடத்தரகர்களின் மூலமாக அதிகரித்துள்ளதாக வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment