நாட்டின் மூன்று துறையினரும் இணைந்தாலே பயங்கரவாதம் முற்றாக ஒழியும்

நாட்டில் அரசியல்வாதிகள், புலனாய்வுப் பிரிவினர் மற்றம் பாதுகாப்புத் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டாலே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று துறைகளிடையே தற்போது பாரிய விரிசல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாபத்தில் நடைபெற்ற ‘ தேசிய வழி ‘ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனுடன் தொடர்புடைய குழுவில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னொரு பகுதியினர் அழிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் நாட்டில் ஏற்படுத்திச் சென்ற அழிவை மறந்துவிட முடியாது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் பலர் இன்று சுதந்திரமாக வெளியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்கவில்லை.
இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் இவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த பயங்கரவாதவாதிகள் முன்வரப்போவதில்லை.
சிரியா, லிபியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கும் இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எமக்குப் புரியவில்லை. அவற்றைக் காரணம் காட்டி எம் நாட்டு கிறிஸ்தவர்களை பழிவாங்கியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இஸ்லாமிய கடவுளைத் தவிர வேறு எந்த கடவுளும் உண்மையானவர் அல்ல என்பதும் இஸ்லாத்தைத் தவிர வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் வாழக்கூடாது என்பதுமே இஸ்லாம் அடிப்படைவாதிகளின் எண்ணமாகும்.
இன்று அரசியல்வாதிகள், புலனாய்வுப்பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுக்கிடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு குறித்த மூன்று துறைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதுவே காலத்தின் தேவை” என அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment