டிஜிட்டல் கரன்சியை அரசே வெளியிட திட்டம்

பல நாடுகளில் புழக்கத்தில் உள்ள பிட்காயின் உட்பட டிஜிட்டல் கரன்சிக்களை தடை செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அரசே அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடவும் உயர் குழு பரிந்துரை செய்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு நாடும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் கரன்சிகளுக்கு ஈடான மதிப்பு கொண்டிருந்தாலும் பிட்காயின்களை பரிவர்த்தனை செய்வது பெரும் பணக்காரர்கள், பெரிய நிறுவனங்கள் தான். அதனால் சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.  எந்த நாட்டின் மத்திய வங்கியும் இதை கட்டுப்படுத்த முடியாது. அரசு கட்டுப்பாட்டிலும் இவை இருப்பதில்லை. பிட்காயினுக்கு அங்கீகாரம் உள்ள நாடுகளில் இதற்கான பிரத்யேக ஏடிஎம்கள் உள்ளன. ஏன், இந்தியாவில் தடை செய்தும் பிட்காயின் ஏடிஎம்கள் நிறுவப்பட்டது. பெங்களூருவில் யூனோகாயின் என்ற கிரிப்டோ நாணய ஏஜென்சி, கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை ஏஜென்சியை துவக்கியது. ஆனால் சில நாட்களிலேயே இந்த ஏடிஎம் நிறுவிய சத்விக் விஸ்வநாத், பி.வி.ஹரீஷ்  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, பிட்காயின் மீதான பிடியை இறுக்கியது. இருப்பினும் சட்ட விரோத ஏஜென்சிகள் மூலம் பரிவர்த்தனை நடக்கத்தான் செய்கிறது.* பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டது. இதற்காக,  கிரிப்டோ கரன்சிகள் தடை மற்றும் முறைப்படுத்துதல் மசோதா - 2019’ வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்தன. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. இதில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் வைத்திருப்பது, விற்பது, வாங்குவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும். இவற்றில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. ஜாமீனில் வெளிவர முடியாது. இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டால், பிட்காயின் வைத்திருப்பவர்கள் தங்களிடம் எவ்வளவு மதிப்பிலான கரன்சி உள்ளது என 90 நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். * பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளை பரிவர்த்தனை செய்பவர்கள், இவற்றில் முதலீடு செய்பவர்கள் சாமானியர்கள் அல்ல. பெரும் பணக்காரர்கள். அவர்கள்தான் இதில் முதலீடு செய்ய முடியும். பல்வேறு நாடுகள் பிட்காயின் மீது விதிக்கும் கெடுபிடிகள், தளர்வுகளுக்கு ஏற்ப அவற்றின் மதிப்பு மாறுபடும்.* பிட் காயின்களை பரிவர்த்தனை செய்வதில் இப்போது போதை மருந்துகள் கடத்துவோர், விற்போர் மற்றும் தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துவதாக உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. இதை தடுக்க மத்திய அரசு , பொருளாதாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்கா தலைமையில் ஒரு நிபுணர் கமிட்டியை நிறுவியது. இதன் பரிந்துரை படி, பிட்காயின் உட்பட டிஜிட்டல் கரன்சிக்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். இதை வைத்திருப்போருக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.    மேலும், மத்திய அரசே, பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளை விற்பனை செய்ய தனியாக ரிசர்வ் வங்கி மூலம் ஒரு  அமைப்பை நிறுவலாம். அதிகாரப்பூர்வமாக இந்த பிட்காயின்களை விற்பனை செய்ய திட்டமிடலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment