ஒரு குடும்பம் ஆட்சிக்கு வரக் கூடாது என்று இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமே 19 ஆவது திருத்தச் சட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
தான் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக இரு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை சேர்த்தனர். பசில், கோட்டாபய ஆகியோருக்காக வெளிநாட்டுப் பிரஜாவுரிமை என்ற அம்சத்தை இணைத்தனர். நாமல் ராஜபக்ஸ தவறியாவது வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளரின் வயதெல்லையை 35 ஆக மாற்றினர்.
இந்த விடயங்களைக் காட்டி ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கையை கட்சிதமாக இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க செய்தார். இதனால், ஜனாதிபதியும் ஏமாற்றப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment