அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் தமது பதவிகளை மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அமீர் அலி மற்றும் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவும் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment