நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும்  நாடாளுமன்றத்தில் தொடரவுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. அதனையடுத்து, இன்று மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் விடுதலை முன்னணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எந்த தீர்வையும் எட்டவில்லை. இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்திருந்தது.
எனினும் அந்த கூட்டத்திலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment