லிபியா குடியேற்றவாசிகளின் மையத்தில் தாக்குதல்

லிபியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ரிபொலிக்கு கிழக்காக உள்ள தஜோரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 80 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தடுப்பு மையத்தில் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களே வசித்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகளுக்கு லிபியா ஓர் இடைத்தங்கள் மையமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment