சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது. டென் (10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், வாக்குவம் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

அந்த வரிசையில் தற்போது ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ பிரபலமாகி வருகிறது. ஒருவர் பாட்டிலைப் பிடித்திருக்க ‘கிக்’ மூலம் அந்த மூடியைக் கழற்ற வேண்டும் இதுதான் சேலஞ்ச். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம்


இந்த சேலஞ்ச் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. சிலர் இதை சரியாக செய்கின்றனர். ஆனால் பலர் இதை முயற்சித்து கீழே விழுவது, பாட்டிலை உடைப்பது, எதிரே இருப்பவரை தவறுதலாக உதைத்து விடுவது போன்றும் நடக்கிறது. எனவே, எதிரில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment