கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக நேற்று (21) முற்பகல் கொழும்பு, பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் விசேட அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
21 மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், இலங்கை அமபுர நிக்காயவின் மகாநாயக்கர் வண.கொடுகொட தம்மாவாச தேரரின் தலைமையில் இந்த புண்ணிய நிகழ்வு இடம்பெற்றது.
கலாநிதி திருத்தந்தை கெமிலஸ் பெர்னாண்டோ, வண.திருத்தந்தை டெனின்டன் சுபசிங்க, வண.திருத்தந்தை பிரீலி முத்துகுடஆரச்சி உள்ளிட்ட திருதந்தைகளும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment