மின் வழித்தடத்தை சீரமைக்க உத்தரவு

கடலோர மாவட்டங்களில் உள்ள, மின் கோபுரங்களில், மழைக்கு முன், 'பாலிமர் இன்சுலேட்டர்' என்ற, நவீன கருவியை பொருத்தும்படி, பொறியாளர்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், தரையில் இருந்து, பல நுாறு அடி உயரமுள்ள, மின் கோபுர வழித்தடம் வாயிலாக, அதிக திறன் துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படுகிறது. பெரும்பாலான, மின் கோபுரங்கள், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகள் ஓரங்களில் உள்ளன.விரைவில், மழைக் காலம் துவங்க உள்ளது. இதனால், பலவீனமாக உள்ள மின் கோபுரங்களை கண்டறிந்து, சீரமைக்குமாறு, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.பலவீனம்மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழையின் போது ஏற்படும் மண் அரிப்பில், மின் கோபுரங்கள், பலவீனமாக வாய்ப்புள்ளது. எனவே, அதிக தண்ணீர் செல்லும் இடங்களில் உள்ள கோபுரங்களின் அடித்தள பகுதியில், சிமென்ட் கலவை பூசி வலுப்படுத்துமாறும், கம்பிகளை ஆய்வு செய்யுமாறும், பொறியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின் கோபுரத்தையும், மின் கம்பியையும் இணைப்பதில், இன்சுலேட்டர் என்ற கருவி முக்கிய பங்கு வகிக்கிறது. பீங்கானால் செய்யப்பட்ட கருவியின் மீது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு, கடலில் இருந்து வரும் உப்பு காற்றும் படர்கின்றன.அவற்றின் மீது, பனி விழுந்ததும், இன்சுலேட்டரில் விரிசல் ஏற்பட்டு பழுதாகின்றன. இதனால், மின்சாரத்தை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது, வட சென்னை பகுதியில் உள்ள மின் கோபுரங்களில், மாசு படர்வதை தடுக்க, பாலிமர் இன்சுலேட்டர் என்ற நவீன கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் விலை, சற்று அதிகம்.அறிவுறுத்தல்விரைவில், மழைக் காலம் துவங்க உள்ளது. அதை தொடர்ந்து, பனி சீசன் வரும். அதற்கு முன்னதாக, கடலோர மாவட்டங்களில் உள்ள, மின் கோபுரங்களில், பழைய இன்சுலேட்டரை அகற்றிவிட்டு, பாலிமர் இன்சுலேட்டர் பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment