நீலகிரி மாவட்டத்தில் உள்ள, குந்தா நீரேற்று மின் நிலையத்தில், 'எலக்ட்ரிகல்' பணிகளை மேற்கொள்ள, தமிழக மின் வாரியம் கோரிய, 'டெண்டரில்' பங்கேற்ற நிறுவனங்கள், மிக அதிகமான விலை புள்ளி வழங்கியுள்ளன. 

இதுகுறித்து, மின் வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:நீலகிரி மாவட்ட, குந்தா மலை பகுதியில், மின் வாரியத்திற்கு, 833 மெகா வாட் திறனில், 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. குந்தா வட்டத்தில், தலா, 125 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய, குந்தா நீரேற்று மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மொத்த திட்ட செலவு, 1,831 கோடி ரூபாய்.தற்போது, குந்தாவில் உள்ள, மின் நிலையங்களில், அணைகளில் திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, ஒரு முறை மட்டுமே, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 'மோட்டார் பம்ப்'நீரேற்று மின் நிலையத்தில், ஒரு முறை பயன்படுத்திய தண்ணீர், அதிக திறனுள்ள, 'மோட்டார் பம்ப்' வாயிலாக, மீண்டும், அணைகளுக்கு எடுத்து செல்லப்படும்.அந்த தண்ணீரை, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். குந்தா நீரேற்று மின் நிலையம், மூன்று பகுதிகளாக செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மின் நிலையத்திற்கு, தண்ணீர் எடுத்து வரப்படும் சுரங்க வழித்தடம், மின் நிலைய கட்டுமானம், தண்ணீர் செல்லும் வழித்தடம் ஆகிய பணிகள், ஒரு ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, தற்போது, மேற்கொள்ளப்படுகின்றன.மின் நிலையத்தில், மின் உற்பத்தி செய்வதற்கு பயன்படும், 'டர்பைன்' உள்ளிட்ட சாதனங்கள் பொருத்துவது போன்ற முக்கிய எலக்ட்ரிக் பணிகளை, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேற்கொள்ள, 2017ல், 'டெண்டர்' கோரப்பட்டது. எந்த நிறுவனமும் பங்கேற்காததால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

பின், நடப்பாண்டு ஜனவரியில், புதிய டெண்டர் கோரி, மார்ச் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதில், இரு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. அவை, தொழில்நுட்பம் மற்றும் விலை விபரம் என, இரு விலை புள்ளிகள் வழங்கின.கண் துடைப்புஅதில், மார்ச் மாதம், தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்டதில், இரு நிறுவனங்களும் தேர்வாகின. அந்நிறுவனங்கள், 1,350 கோடி ரூபாய் - 1,400 கோடி ரூபாய் வரை விலை புள்ளி வழங்கியுள்ளன. 
ஆனால், அந்த பணிகளுக்கு, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ள தொகை, 800 கோடி ரூபாய்.நிறுவனங்கள் கோரிய விலை, மதிப்பீடு செய்து உள்ளதை விட, பல மடங்கு அதிகம். அதிகாரிகள்,விலை குறைப்பு என்ற பெயரில், கண் துடைப்பிற்காக பேச்சு நடத்தி, சில கோடி ரூபாயை மட்டுமே குறைக்க வாய்ப்புள்ளது.குந்தா நீரேற்று மின் நிலைய பணிக்கு ஆணை வழங்குவதில், முறைகேடுகளை தடுக்க, நிறுவன தேர்வு பணிகளை, தனி அதிகாரிகள் நியமித்து, கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment