மன்னார் சாந்திபுரம் புனித ஜோசேவாஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இருநாள் கல்வியல் கண்காட்சி இன்று காலை அதிபர் அருட்சகோதரி எஸ்.சவரியம்மாள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புனித அமலோற்பவ மாதா சபை (CIC) அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் சிறுவர்களின் ஆக்கத்தில் கழிவு பொருள்கள் மற்றும் பயன்பாடற்ற பொருள்களில் உருவாக்கப்பட்ட அலங்கார பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது
கண்காட்சி நிகழ்வில், மன்னார் மடு முன்னால் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் மற்றும் அருட்சகோதரி கின்ஸில்டா, பாலர் பாடசாலை ஆசிரியை கிரேஸ் மேரி உட்பட அயல் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், நகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment