ஷுப்மன் கில்லின் குறிக்கோள்

மேற்கிந்தியத் தீவுகளுகள் ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியின் தொடரில்  சிறப்பாக ஆடியவர்தான் ஷுப்மன் கில்.  இவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என பலரால் எதிர்ப்பார்க்கப்பட்டது.

எனினும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 அரைச் சதங்களுடன் 218 ஓட்டங்கள் எடுத்துத் தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில் மட்டும் இந்திய அணியிலிருந்து விடுபட்டுப் போனார். 

இது குறித்து ஷுப்மன் கில் கூறியதாவது:

கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்திய சீனியர் அணி அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். ஏதாவது ஒரு அணியிலாவது என்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாகவுள்ளது. 

இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டு இந்திய அணிக்கான தேர்வுக் குழுவை என் பக்கம் ஈர்ப்பேன். இதுதான் இனி எனது முக்கியமான குறிக்கோள்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடர் எனக்கு பெரிய பாடமாக அமைந்தது. நல்ல பந்துகளை தடுத்து விளையாடி கிரீசில் நீண்ட நேரம் நிற்பதன் முக்கியத்துவத்தை எனக்கு  இந்த தொடர் கற்றுக் கொடுத்துள்ளது-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment