காமெடியன்களில் வடிவேலு, அப்புகுட்டி, யோகி பாபு, சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் ஹீரோவாகி விட்டார்கள். அந்த வரிசையில் தற்போது சூரியும் இடம்பிடித்துள்ளார்.
பலமுறை ஹீரோவாக நடிக்க கேட்டும் மறுத்து வந்த சூரி, இப்போது கேட்டவரிடம் மறுக்க முடியவில்லை. காரணம் கேட்டவர் வெற்றிமாறன்.
தற்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் பிசியாக இருக்கும் வெற்றிமாறன் அடுத்து வடசென்னை 2 ம் பாகத்துக்கு வருகிறார். அதையும் முடித்து விட்டு அவர் இயக்கப்போகிற படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமாகிறார் சூரி.
இது ஒரு சராசரி மதுரை இளைஞனின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் சூரி காமெடியனோ, காமெடி படமோ இல்லை. சீரியசான சப்ஜெக்ட். இதனை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
0 comments:
Post a Comment