சீனாவின் வடமேற்கு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஆறு ஒன்றில் அபாயக்கட்டத்தை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனு. இதேபோல் கன்சூ மாகாணத்தில் மலையிலிருந்து நீரோடை போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்குள்ள 24 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் ஆறுகளுக்கு இடையே தீவு போல் இருந்த சிறிய நிலப்பரப்பில் தனித்து விடப்பட்ட இருவரை பார்த்த தீயணைப்பு துறையினர், கயிறு பாலம் அமைத்து, கயிறுகட்டி அவர்களை மீட்டனர்
தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் ஒருவரையும், தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டு வாகனத்தில் எடுத்து சென்றனர்.
0 comments:
Post a Comment