ஹாங்காங்கில் இரு டபுள் டக்கர் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதிக்கொண்டதில் 77 பேர் காயமடைந்தனர்.
ஹாங்காங்கில் இன்று காலை அலுவலர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று தாய் லாம் சுரங்கம் வழியாக சென்றது. பேருந்து சுரங்கம் வழியாக சூயன் வான் (Tsuen Wan exit) வாயில் வெளியாக வெளியேறியபோது, அதனைத்தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த மற்றொரு பேருந்து, திடீரென மோதியது.
இதில் நிலைத்தடுமாறிய பயணிகள், பேருந்தில் உள்ள கம்பிகளில் மோதி காயமடைந்தனர். தகவல் அறிந்து 26 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 15 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அதிகாரிகள் பேருந்தில் சிக்கி தவித்த ஓட்டுனர் மற்றும் பயணிகளை மீட்டனர். இதில் 77 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment