கட்டடம் இடிந்து இருவர் பலி

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம், குமர்ஹட்டியில் உணவக கட்டடம் இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இடிந்தது. அப்போது, அந்த கட்டடத்தில், 30 ராணுவ வீரர்கள், 7 பொது மக்கள் இருந்தனர்.
தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 18 ராணுவ வீரர்கள், 5 பொது மக்களை அவர்கள் மீட்டனர். 2 பேரது சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 14 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், கடைசியாக கிடைத்த தகவல்ப்படி, 23 பேர் மீட்கப்பட்டனர்.
ராணுவ ஜவான் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment