இலங்கையை தர்ம ராஜ்ஜியமாக வைத்திருப்பதற்கே பணியாற்றுகிறேன்- ஜனாதிபதி

முன்னைய மன்னர் காலத்தை போன்று நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்தே அன்றும் இன்றும் தான் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புத்த பெருமானால் மகாசங்கத்தினருக்கு போதிக்கப்பட்ட ஒழுக்கக் கோட்பாடுகள் பௌத்த சாசனத்தின் அடிப்படையாகவே காணப்பட்டது. தேவநம்பியதிஸ்ஸ மன்னர் ஆட்சி காலம் முதல் சிங்கள மன்னர்கள் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கும் பௌத்த துறவர கிரியைகளை மேற்கொள்வதற்கும் அரச அனுசரணை வழங்கியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஆயிரம் வருடத்திற்கும் மேலாக தர்ம இராஜ்ஜியமாக விளங்குவதற்கு அதுவே காரணமாக அமைந்திருப்பதாகவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (03) உடரட்ட அமரபுர சங்க சபைக்கு சொந்தமான மகாவலி நதிக்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதனை மண்டபத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment