மது போதையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் பொலிஸாருக்கு பணப் பரிசில்களை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாளை முதல் இதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பொது மக்களை ஏற்றுச் செல்லும் வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருக்கையில் கைது செய்தால் அந்த பொலிஸ் அதிகாரிக்கு 5000 ரூபா பணப் பரிசும், ஏனைய வாகனங்களை செலுத்தும் சாரதிகளை மதுபோதையில் பிடித்தால் அந்த பொலிஸ் அதிகாரிக்கு 2500 ரூபா பணப் பரிசும் வழங்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சகல சாரதிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் எனவும் அவ்வாறு ஆஜர்படுத்தப்படுபவருக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்க சட்டத்தில் இடமிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment