பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 'அமானுஷ்யம்'!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், வந்த நாள் முதலே அனைவரிடமும் நான் சிங்கில் தான் இருந்தார். தொடக்கத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களால் ஓரங்கப்பட்டார் மீரா. இதனால் மக்களின் அனுதாபத்தை பெற்றார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் யாருடனும் ஒத்துப் போகாமல், தான் செய்வதுதான் சரி என்ற மனோபாவத்துடன் இருந்து வந்தார். இதனால் பலரும் அவருடன் பழகுவதை தவிர்த்தனர். மேலும் மற்றவர்கள் சொல்வதை கொஞ்சமும் காதில் கேட்காமல் இருந்து வந்தார் மீரா மிதுன்.
நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சனை உருவாக்கி கேமராக்களின் அட்டன்ஷன் தன் மீது பட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார் மீரா. என்னவோ தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே இயக்குநர் சேரனுடன் மீராவுக்கு ஒத்துப்போகவில்லை.

கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் சேரனிடம் சண்டை போடுவதும் அவரை அவமானப்படுத்துவதுமாக இருந்தார் மீரா. இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது சேரன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார் மீரா.

இதனால் சேரன் மட்டுமின்றி, பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். கடந்த சனிக்கிழமை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை அகம் டிவி வழியாக சந்தித்த கமல்ஹாசன், மீராவின் குற்றச்சாட்டை பொய்யென நிரூபித்தார்.

ஆனாலும் அடங்காத மீரா, தனது தவறை உணராமல் உண்மை ஒரு நாள் வெளியே வரும் என்றார். இதனைக் கேட்டு கமல் உட்பட அனைவரும் டென்ஷனார்கள். சேரன் மீதான குற்றச்சாட்டுக்கு பிறகு மீரா பிக்பாஸ் வீட்டில் இருக்கக்கூடாது அவரை வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் குவிந்தன.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மீராவின் எவிக்ஷனை அறிவித்தார் கமல்ஹாசன். இதைத்தொடர்ந்து அனைவரிடம் இருந்தும் பிரியாவிடை பெற்றார் மீரா. அப்போது கூட மீரா, சேரனை காயப்படுத்தினார். அப்போதும் திருந்தாமல் சேரன் கூறாத ஒன்றை பச்சையாக கூறினார் மீரா.
அதாவது, நீங்க வின் பண்ணிட்டீங்க சார், உங்களுக்கு முன் என்னை வெளியேற்றுவேன் என்றீர்கள், அப்படியே செய்துவிட்டீர்கள் என்றார். நான் எப்போது அப்படி கூறினேன் என்றார் சேரன், அதற்கு பதில் சொல்லாத மீரா, ஓகே ஃபைன் சார் என்று கூறிவிட்டு நகர்ந்தார். பாவம் சேரனின் முகமே மாறிவிட்டது.

கடைசி வரை திருந்தவே இல்லை மீரா. போகும் போது கூட சேரன் கூறாத ஒன்றை கூறியதாக பொய் கூறிவிட்டு கிளம்பினார். மேடையில் சந்தித்தபோது கமலும் மீராவிடம் அதை கேட்க மறக்கவில்லை. நீங்கள் வரும் போது சேரனை நேரடியாக தாக்கினீர்களே என்று கேட்டார். அப்போதும் அடங்காமல் ஆமாம், சேரன் என்னிடம் அப்படி ஒரு சவால் விட்டார் என நாக்கு கூசாமல் கமலிடமே பொய் கூறினார் மீரா.

இதைத்தொடர்ந்து வெளியேற்றப்பட்ட மீராவை யாரும் தாக்கிவிடக் கூடாது அவரை பாதுகாப்புடன் அனுப்பவேண்டும் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார் கமல். எப்படியோ பிக்பாஸ் வீட்டில் இருந்த அமானுஷ்யம் வெளியே சென்றுவிட்டது என ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் நிம்மதியடைந்தனர்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment