தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1956ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை ரத்து செய்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார்.
மருத்துவ கல்வியில் புதிய சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா, தனியாருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment