ஹரித்வார் சிவாலயத்தில் குவிந்த கோடிக்கணக்கான சிவபக்தர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வடமாநிலங்களின் பின்பற்றப்படும் இந்து நாட்காட்டியின் சாவன் மாதத்தில், சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கன்வார் என்றால் நீண்ட கம்பு என்று பொருள்.
நீண்ட கம்பின் இருபுறமும் கட்டித்தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பானைகளுடன் காவி உடையணிந்து யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தர்கள், ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை சேமித்து தோள்களில் சுமந்து செல்வர்.
அவ்வாறு சேமிக்கப்படும் நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்வர். இந்த பயணம் மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவர். வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வார் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி துவங்கியது.
இந்நிலையில் ஹரித்வாரிலுள்ள சிவாலயத்தில் இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீரை பெறுவதற்காக குவிந்தனர். மூன்றரை கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை 3 கோடியே 30 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரகாண்ட் மாநில போலீசார் செய்துள்ளனர். கன்வார் யாத்திரைக்காக ஹரித்வாரிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment