பிக்பாஸ் வீட்டுல ஓபன் நாமினேஷனாம்!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக இன்று ஓபன் நாமினேஷன் நடக்கிறது. பிக்பாஸ் சீசன் 3யில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நாமினேஷன் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் ஹவுஸ்மேட்ஸ்கள் தலா 2 பேரை நாமினேட் செய்ய வேண்டும். அதன்படி அதிகமாக நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்கள் எவிக்ஷன் லிஸ்டுக்கு வருவார்கள். அவர்களில் யாரை மக்கள் காப்பாற்ற விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதிக வாக்களிப்பார்கள்.


யாரை வெளியே அனுப்ப வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள். இதனால் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.அதன்படி இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீராமிதுன் என நான்கு பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ்க்கான புரமோ வெளியாகியுள்ளது.அதன்படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முதலில் லாஸ்லியா நாமினேஷன் புராசஸை தொடங்குகிறார். அவர் மதுமிதா மற்றும் சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்கிறார்.இதுவரை கன்ஃபெஷன் ரூமில் ஒருவருக்கொருவர் தெரியாமல் ரகசியமாக நாமினேஷன் நடைபெற்றது. இதனால் உள்ளே நாமினேட் செய்துவிட்டு வெளியே நல்லவர் போல் க்ளோஸாக பழகி வந்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள்.இன்று ஓபன் நாமினேஷனை வைத்து சண்டையை மூட்டிவிட்டுள்ளார் பிக்பாஸ். லாஸ்லியா மதுமிதாவின் பெயரை நாமினேட் செய்தாலும், நீ அந்தப்பக்கம் போய் விளையாடு, நாங்கள் மதுமிதாவை காப்பாற்றிவிடுவோம் என தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment