விமர்சனத்துக்குள்ளாகும் இரா.சம்பந்தன் உரை!

த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என ஆற்றிய உரை தொடர்பில் சமுக்க வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வெளிநாட்டில் இருந்து , தற்போது யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கத்தோலிக்க மதகுரு ஒருவர் உட்பட சிலரின் கேலிச்சித்திரங்கள் வெளியாகி உள்ளன.
இது தவிர, தமிழ் மக்கள் மத்தியிலும் இரா.சம்பந்தரின் உரை பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் , எதற்காக சம்பந்தர் அவ்வாறு உரையாற்றினார் என எழுந்த கேள்விகளுக்கு பல்வேறு பதில்கள் முன்வைக்கப்படுகின்றன.
அந்தவகையில் ,தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதுபோல காட்டிக் கொள்வதன் மூலம், தமிழ் இளைஞர்களை மீண்டும் கைதுசெய்து சிறைகளில் அடைப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி வேலையாகவே சம்பந்தர் உரையாற்றினார் என பலரும் விசனம் வெளியிட்டுள்ளானர்.
அத்துடன் அவரின் உரையானது, முன்னாள் போராளிகள் மீது படையினருக்குச் சந்தேகம் ஏற்பட வைத்து, வடக்குக் கிழக்குப் பகுதியை பதற்றமான சூழ்நிலையில் வைத்திருப்பதுதான் அவரின்நிலைப்பாடு என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் , சிறைகளில் அடைபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு விரும்புகின்ற அரசாங்கத்துக்கு உதவும் வகையிலேயே சம்பந்தர் தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பந்தர் ஆற்றிய உரை திட்டமிடப்பட்டதாகவே பலராலும் பார்க்கபடுகின்றமையினால் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment