வனவளத் திணைக்களத்துக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் தமது பூர்வீக காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்துவதாக தெரிவித்து  காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக  இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, அரசே எமது வருமானத்தை அழித்து சொத்தை அபகரித்து எம்மை அழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் இதன்போது தாங்கியிருந்தனர்.

சுமார் 1 மணிநேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கிராம சேவகரிடம் மனு ஒன்றையும் கையளித்தனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் ,கிராம சேவகருடன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.                                           
1974 ஆம் ஆண்டு முதல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் தமது கிராமத்தவர்களுக்கு சொந்தமான 428 ஏக்கர் காணியை தற்போது வனவளத் திணைக்களத்தினர் தமது எல்லைக்குட்பட்டதாகச் சொல்கின்றனர். அது தொடர்பில் எதுவித சாதகமான பதிவும் எவரும் தமக்கு வழங்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

428 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 428 ஏக்கர் காணி தமது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளுக்குள் தாம் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

குறித்த காணிக்கு அப்போது சில ஆவணங்கள் கையளிக்கப்பட்டபோதிலும் அவை 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் தொலைந்துபோன நிலையிலேயே தாம் மீளக் குடியேறி குறித்த காணிகளை சீர்செய்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் வனவளத்திணைக்களம் தமது காணி என தெரிவித்து வருகிறது. என்றும் தெரிவித்தனர்.












Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment