பிரதமருக்கு எதிராகப் பேரணி முன்னெடுப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலகக் கோரி அந்த நாட்டின் எதிர்கட்சி பல இடங்களில் பேரணியை முன்னெடுத்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப் பேரணியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கறுப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில்  பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சி  குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையடுத்தே சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் இம்ரான் கான் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டி எதிர்க் கட்சிகள் நேற்று பாகிஸ்தானில் பல இடங்களில் பேரணியாகச் சென்றனர்.  

நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment