பிரத்தியேக வகுப்புகளிற்கு தடை

போயா மற்றும் ஞாயிறு தினங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கான தனிநபர் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை முன்னாள் நீதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ சமர்பிக்க உள்ளார்.
1971 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள் சட்டப்பிரிவு இலக்கம் 29 ஐ திருத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு எவ்வகையிலேனும் பிரத்தியேக வகுப்புகளை பௌர்னமி தினமான போயா தினத்தன்றோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை மூன்று மணிவரை எவரேனும் வளாகங்களிலோ அல்லது ஏதேனும் இடத்திலோ நடத்த முடியாதென புதிய திருத்த சட்டமூலம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment