எதிர்க்கட்சித் தலைவருக்கும் இலங்கைக்கான முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுக்கும் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இலங்கையின் அபிவிருத்திக்காக மத்திய கிழக்கு நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளதாக கூறிய மகிந்த, எனவே அந்நாட்டு தலைவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைய இலங்கையில் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எதிர்க்கட்சியின் பொறுப்பு எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஆப்கானிஸ்தான் , இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பலஸ்தீனம், பங்களாதேஷ், குவைத், கட்டார், மாலைத்தீவு, ஈரான், லிபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்களும் கலந்துண்டனர்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, செஹான் சேமசிங்க உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment