பா.ஜ.,வினர் கர்நாடக, கோவா மாநிலங்களில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பதை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட, காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள், போராட்டம் நடத்தினர்.
பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பதாகைகளுடன், காங்கிரஸ் எம்.பி.,க்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, '' கர்நாடகா, கோவா மாநிலங்களில் மத்திய அரசு ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் சக்திகளை ஊக்குவிக்கிறது,'' என்று சாடினார்.
கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் தங்களை தனிக்குழுவாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், அங்கு, காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இப்பிரச்னைக்கு பா.ஜ.,வே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
0 comments:
Post a Comment